உலகப் புகழ்பெற்ற விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு மாதங்களில் பல சிறப்பு விழாக்கள் பூஜைகள் நடைபெற்று வருகிறது... குறிப்பாக ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு அம்மனுக்கு 108 பெண்கள் பால்குடன் எடுத்து வந்து பாலாபிஷேகம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பால்,தயிர், இளநீர், சந்தனம்,மஞ்சள், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாதாரணை நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து இருக்கன்குடி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் 108 விளக்குகளைக் கொண்டு சிறப்பு பூஜை செய்து அம்மனின் பாடல்களை பாடி சிறப்பு வழிபாடு செய்தனர்.சித்ரா பௌர்ணமி முன்னிட்டு நடைபெற்ற 108 விளக்கு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆன்மிகம்
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வைப்பாற்றில் இறங்கிய கள்ளழகர்! : குதிரை வாகனத்தில் எழுந்தருழி பக்தர்களுக்கு அருள்பாலித்த வெங்கடாசலபதி...
அடுத்த
தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி நாசம்!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025