தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சண்முகர் சன்னதியில், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சண்முகருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பாடல்களை பாடி மனமுருகி தரிசனம் செய்தனர்."ஆடிக்கிருத்திகையை" முன்னிட்டு இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் முருகனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள முருகன் சன்னதியில் வள்ளி, தெய்வானையுடன் கூடிய ஸ்ரீ சண்முகர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனை முன்னிட்டு  வள்ளி, தெய்வானையுடன் கூடிய சண்முகருக்கு பால், சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய், திருநீறு, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி அரோகரா கோஷமிட்டபடி, முருகன் பாடல்களை பாடி மனமுருகி வழிபட்டனர்.