தூத்துக்குடி பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர்தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி மற்றும் அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பள்ளக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் பின்னர் வீதி உலா நடைபெற்றதுதூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய ஐப்பசி திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது திருவிழாவில் 9 ஆம் நாள் நிகழ்ச்சியாக பாகம் பிரியாள் மற்றும் சங்கர ராமேஸ்வரர் 26 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூம்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் சுவாமி மற்றும் அம்பாளுக்கு 16 வகையான சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து பூம்பள்ளக்கில் சுவாமி மற்றும் அம்பாள் வீதி உலா நடைபெற்றது இதையெட்டி சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.