கோவில்பட்டியில் கோலாகலமாக நடைபெற்ற பங்குனி தேரோட்டம்!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் - பூவநாத சுவாமி  திருக்கோவில் பங்குனி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தனித்தனி தேரில் எழுந்தருளி காட்சியளித்த சுவாமி மற்றும் அம்பாளை ஏராளமான பக்தர்கள் மனமுருகி தரிசனம் செய்தனர். மேளதாளம் முழங்க நான்கு ரதவீதிகளில் சுற்றி வந்த தேரினை பக்தர்கள் ஓம்சக்தி பராசக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து இழுத்தனர்.