தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்து செல்வர். அதிலும் பிரதோஷம் போன்ற முக்கிய தினங்களில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், " தை மாத வளர்பிறை பிரதோஷத்தில்," நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, மஞ்சள் உள்ளிட்ட பலவகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, எலுமிச்சை, தாமரைப்பூ, அருகம்புல், மாவிலை, எருக்கம் பூ, மஞ்சள், வில்வ இலை, உள்ளிட்ட பல வகையான மாலைகளால் நன்கு அலங்கரிக்கப்பட்டப்பின் சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சென்றனர்.
ஆன்மிகம்
தை மாத பிரதோஷ வழிபாடு : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை?ஒரு தலைப்பட்சமாக செயல்படும் காவல்துறை...
அடுத்த
ஆம்னி பேருந்தில் 37 பவுன் தங்க நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருட்டு!
இதையும் படிக்கலாம்
சித்ரா பௌர்ணமி சிவபெருமானின் சமுத்திர கடலில் படலம் வலைவீசும் திருவிளையாடல்!
13 May 2025
குமரக்கடவுலுக்கு பால்,வேல்,அழகுவேல் காவடி !
29 Apr 2025
மேட்டுப்பட்டியில் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா - 108 பால்குடங்கள் எடுத்து பெண்கள் சிறப்பு வழிபாடு!
29 Apr 2025
விளாத்திகுளத்தில் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
15 Apr 2025