விளாத்திகுளம் அருகே சரக்கு வேன் மோதி  ஒருவர் பலி. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டையாபுரம்  வடக்கு சேனையர் தெரு பகுதியை சேர்ந்த வேலு மூப்பனார் என்பவரின் மகன் பாலு மணி (59) இவர் கோவில்பட்டி சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு சாலையை கடக்கும் முயன்ற போது, கோவில்பட்டியில் இருந்து எட்டயபுரம் நோக்கி வந்த சரக்குவேன் மோதி விபத்துக்குள்ளானதில் பாலு மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். என எடுத்து பாலுமணியின் உடலை மீட்ட எட்டையாபுரம் காவல் நிலைய போலீசார் உடற்குற ஆய்வுக்கு எட்டையாபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து. விபத்து ஏற்படுத்திய  வேன் ஓட்டுநர்  எட்டையபுரம் மகாராஜபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் மகன் மாரிமுத்து(41) என்பவரை பிடித்து எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.