விளாத்திகுளம் அருகே மக்களுடன் முதல்வர் திட்டத்தை எம்எல்ஏ மார்க்கண்டேயன் துவக்கி வைத்தார்!
தமிழகம் முழுவதும் மக்களுடன் முதல்வர் திட்டத்தை ஊரகப் பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எப்போதும் வென்றானில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனத்தை வழங்கி பொதுமக்களிடம் புகார் மனுக்களைப்பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, அரசு துறை சார்ந்த அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் எப்போதும் வென்றான் ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்குமார், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.