விளாத்திகுளம் அருகே காமராஜரின் 124-வது  பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!  



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழ ஈரால்-து. அருணாசலாபுரம் கிராமத்தில் கண்மணி தர்ம தொண்டு நிறுவனம் சார்பில் வருடம் வருடம் கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக பேச்சுப்போட்டி, நடன போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளை நடத்தி பரிசுப்பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கம், அந்த வகையில் இன்று பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் விளாத்திகுளம் டிஎஸ்பி சுந்தரபாண்டியன், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அனிதா,எட்டயபுரம் வட்டாட்சியர் சுபா, எட்டையாபுரம்  காவல் ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவர்களிடம், மக்களுக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த   கர்மவீரர் காமராஜர் பற்றியும் பள்ளி மாணவ மாணவிகளின் கல்வி எதிர்காலம் குறித்தும் சிறப்புரையாற்றினார்கள்.


அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் பேச்சுப்போட்டி, நடன போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு, நினைவு பரிசு வழங்கப்பட்டது, அதனைத்தொடர்ந்து அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 125 பள்ளி மாணவ மாணவிகளுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.


நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நிலக்கிழார் காசி நாடார் தலைமை தாங்கினார். து. அருணாசலபுரம் நாடார் உறவின்முறை சங்கர் பொதுச்செயலாளர் கருப்பசாமி நாடார், கீழஈரால் காமாட்சி சிட்பண்ட்ஸ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கண்மணி தர்ம தொண்டு நிறுவனர் சந்திர மோகன்,தலைவர் பாலமுருகன், செயலாளர் ஆனந்த் தொழிலதிபர் தங்க மாரியப்பன், ஊராட்சி மன்ற செயலாளர் சிவபாலன், பள்ளி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி,துணை தலைமை ஆசிரியர்கள் முத்து உமா, ஜெயலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.