தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாததால் பேருந்து நிலையம் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விளாத்திகுளத்தில் இருந்து மற்ற பகுதிகளுக்கு செல்வதற்காக பேருந்து நிலையம் வந்த பயணிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே செல்லும் நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையிலும் கூட மின்விளக்குகள் எரியாமல் காட்சியளிக்கிறது. ஏற்கனவே விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் போதுமான மின்விளக்குகள் இல்லாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையில் தற்போது உள்ள விளக்குகளும் இதுபோன்ற அடிக்கடி எரியாமல் இருப்பதால் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கின்றனர். ஆகையால், உடனடியாக பேருந்து நிலையத்தின் உட்புறத்தில் எரியாமல் இருக்கக்கூடிய மின்விளக்குகளை சரிசெய்வதோடு மட்டுமின்றி கூடுதலான உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது....
News
மின்விளக்கு எரியாததால் பயணிகள் சிரமம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
இருளப்பசுவாமிக்கு 1008 கிலோ ஆட்டுக்கறி படையல்!- பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ விருந்து!
அடுத்த
குண்டர் தடுப்பு சட்டத்தில் இருவர் கைது.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026