கோவில்பட்டி அருகே  முன் விரோதம் காரணமாக நடந்த  கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து PCR நீதிமன்றம் தீர்ப்பு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செண்பகப்பேரி பகுதியைச் சேர்ந்த பாண்டியராஜ் (25) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளான அதே பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை மகன் சதீஷ் (26) மற்றும் பாலமுருகன் மகன் மதன் (24) ஆகிய இருவரையும் நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட PCR நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மேற்படி நீதிமன்ற நீதிபதி வசீத்குமார் இன்று சதீஷ் மற்றும் மதனை குற்றவாளிகள் என உறுதி செய்து அவர்களுக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூபாய் 20,000/- அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.


இதில் அரசு தரப்பில் வழக்கறிஞர் மணிகண்ட பிரபு ஆஜரானார்.