பயிர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கபடும் இழப்பீடு தொகையை தனியார் இன்சூரஸ் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்கு தான் இத்திட்டம் வழி வகிக்கிறது - தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் மாநில செயலாளர் மாசிலாமணி குற்றச்சாட்டு. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்  மாவட்ட குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது மாவட்ட தலைவர் வி.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் தென்பகுதிகளில் பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். பிபிடி16, ஏடிடி16, என்எல்ஆர், ஆர்என்ஆர் போன்ற நெல் விதைகளை விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வேளாண் துறை மூலம் வழங்கப்பட வேண்டும்.கடந்த ஆண்டு பருவமழை குறைவினாலும் நடப்பு ஆண்டு பருவமழை பொய்த்ததாலும் மானாவாரி விவசாயிகள் நடப்பாண்டில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஏக்கருக்கு தமிழ்நாடு அரசு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடாக  வழங்க வேண்டும். நடப்பாண்டில் பயிர் காப்பீடு திட்டத்தின் மூலமாக அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு தொகையை உரிய காலத்தில் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தொடர்ந்து மாநில செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது.தென்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சி பார்வையிட்டோம். தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்து போய் விட்டது. இதனால் சூரியகாந்தி, பருத்தி, மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நன்கு வளர்ந்து கருகி கிடக்கின்றன. பல இடங்களில் கருகிப் போன பயிர்களை அழித்து மீண்டும் உழுது விதைப்பு செய்துள்ளனர். அந்த பகுதியில் வளர்ந்த பயிர்களும் கருகி வருகின்றன. அந்த பயிர்கள் தண்ணீர் இல்லையென்றால் முற்றாக அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி மட்டுமல்ல தென்மாவட்டங்களில் வறட்சி இருக்கிறது.கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சிக்கு அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.2965 மட்டுமே வழங்கியது. ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் சுமார் ரூ.20000 வரை செலவு செய்கின்றனர். அரசு வழங்கும் நிவாரண தொகை தேசிய மற்றும் மாநில பேரிடர் ஆணையங்கள் மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.தொடர்ந்து மழை பொய்த்து பாதிப்பு, உற்பத்திக்கான இடுபொருள் செலவு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, அதற்குரிய இடர்பாட்டு நிவாரணத்தை  அரசு மறுபரிசீலனை செய்து வழங்க வேண்டும்.இப்போது ஏற்பட்டுள்ள வறட்சியை, அரசு உரிய ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.25000 வழங்க முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கெனவே பருவமழை குறைவாக பெய்கிறது.எனவே, அரசு தொலைநோக்கு திட்டத்துடன் ஏரி, கண்மாய்களை தூர்வாரினால் தேவையான அளவுக்கு தண்ணீர் சேமிக்க முடியும். தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் வண்டல் மண் அள்ள விவசாயிகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அப்படி மனுமதி கொடுத்தால் கூட, கண்மாய்கள், ஏரிகள் தூர்வாரப்படும்.2022-23-ம் ஆண்டுக்குரிய அனைத்து பயிர்களுக்கு காப்பீடு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இழப்பீடு ரூ.560 கோடி வழங்கி உள்ளனர். ஆனால், விவசாயிகள் செலுத்தி உள்ள பங்குதொகை ரூ.120 கோடி, மத்திய அரசு வழங்கி உள்ள பங்கு தொகை ரூ.874 கோடி. தமிழ்நாடு அரசு வழங்கி உள்ள ஈவு தொகை ரூ.1325 கோடி. இவை மொத்தம் ரூ.2319 கோடி. இதனை பெற்ற தனியார் காப்பீடு நிறுவனங்கள், விவசாயிகளுக்கு திரும்ப வழங்கிய வெறும் ரூ.560 கோடி மட்டுமே. ரூ.1759 கோடி தனியார் நிறுவனங்கள் எடுப்பதற்கு விவசாயிகளின் பெயரில் கொள்ளையடிப்பதற்கு எப்படி இந்த திட்டம் வழிவகுக்கிறது?, எனவே, இந்த திட்டத்தை முற்றாக நிராகரிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப்பாசம் கொண்டு பிசான பருவம் நடக்கும். ஆனால், இந்தாண்டு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் திறக்க எந்தவித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. குடிநீருக்கே தண்ணீர் இல்லையென கூறுகின்றனர். ஆனால், குடிநீர் என்ற பெயரில் பெரிய நிறுவனங்களுக்கு தண்ணீர்  எடுக்கின்றனர். எனவே, தாமிரபரணியில் இருந்து பிசான பருவத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இதற்கான போராட்டங்களையும், நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளோம்.செய்றகை உரங்கள், ரசாயன உரங்கள் போதுமான அளவு உற்பத்தி செய்வதில் அரசு அக்கறை கொள்வது கிடையாது. நிறுவனங்களே உரங்களை கூடுதல் விலைக்கு மறைமுக விற்பனை செய்கின்றனர்.இல்லையென்றால் இடுபொருட்களை கொடுத்து, இதை வாங்கினால் தான் ரசாயன உரங்கள் வழங்கப்படும் என தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல அரசு நிறுவனங்களே செய்கிறது என்று தகவல்கள் வருகின்றன.எனவே, உரங்கள் என்பது விவசாயத்துக்கு அடிப்படையாக மாறிவிட்டது. எனவே, ஒரு பருவத்துக்கு முன்னதாகவே திட்டமிட்டு தேவையான உரங்களை அரசு வழங்கினால் இந்த தனியார் கொள்ளைக்கு வழிவகுக்காது. எனவே, ஒரு பருவத்துக்கு தேவையான உரங்களை காலத்தில் தருவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் அ.லெனின் குமார் வேலை அறிக்கையை சமர்பித்தார். கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் பிச்சையா, மாநில துணை செயலாள் சு.நல்லையா, தாலுகா செயலாள் ஆர்.சோலையப்பன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் வி.பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பேட்டி: பி.எஸ்.மாசிலாமணி -தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர்