வயநாடு பகுதியில் நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு கனிமொழி MP தனது X பக்கத்தில் ஆறுதல்!
கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெறும் சோகத்தினர் ஏற்படுத்தியுள்ளது, உயிரிழந்த குடும்பத்திற்கு இந்திய பாரத பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சரும் மு.க ஸ்டாலின், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தங்களது வருத்தங்களையும் ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறுகையில்,கேரளாவின் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பெரிய நிலச்சரிவில் சிக்கி 36க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இந்தியா முழுவதும் பெறும் சோகத்தினர் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் சிக்கியுள்ளவர்களை விரைவில் மீட்கும் என நம்புகிறேன் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தனது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.