விளாத்திகுளத்தில் பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச குரல்வழி கிறிஸ்துவ வேதாகமம் வழங்கப்பட்டது.

ஹைதராபாத் ரியல் இந்தியா மினிஸ்ட்ரி ஊழியம்,தமிழ்நாடு பார்வையற்றோருக்கான பொதுவாழ்வு ஊழியம் மற்றும் தூத்துக்குடி அன்னை தெரசா பாா்வையற்றோா் நலவாழ்வு அறக்கட்டளை சார்பாக,விளாத்திகுளம் மட்டுமல்ல சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவசமாக குரல் வழி கிறிஸ்துவ வேதாகமம் வழங்கப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியில் ரியல் இந்தியா மினிஸ்ட்ரி ஊழியம் பணியாளர் ,

தமிழ்நாடு பார்வையற்றோருக்கான பொதுவாழ்வு ஊழியம் பணியாளர்

,அன்னை தெரசா பார்வையற்றோர் நல வாழ்வு அறக்கட்டளை பணியாளர் இம்மானுவேல், தன்னார்வலர்கள் சங்கர்கணேஷ் , ஜான்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.