காங்., கட்சியின் ராகுலின் எம்.பி., பதவி பறிப்பு குறித்து மேல் முறையீட்டு மனுவை குஜராத் ஐகோர்ட் தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து, பிரதமர் மோடியை கண்டித்து காங்., கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி பஸ் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் அருண்பாண்டியன் தலைமை வகித்தார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், மாவட்டமருத்துவ அணி தலைவர் டாக்டர் மாறன், மாவட்ட செயலாளர் துரைராஜ், பி.சி.சி., உறுப்பினர்கள் திருப்பதிராஜா, உமாசங்கர், மாவட்ட பொது செயலாளர்கள் சண்முகராஜா, ஐ.என்.டி.யூ.சி., ராஜாசேகரன், ராஜா, முத்து, மாவட்ட செயலாளர் ஜோஷ்வா, எஸ்.சி/எஸ்.டி பிரிவு மாநில துணை தலைவர் மாரிமுத்து, மாவட்ட தலைவர் கண்ணாயிரம்முத்து, நகர தலைவர் நேதாஜி காளிதாஸ், மணிக்கொடி, மாவட்ட சிறுபான்மையினரின் பிரிவு தலைவர் அருள்தாஸ்,வட்டார காங்கிரஸ் சுந்தர்ராஜ் , நகரசெயலாளர் ஆறுமுகம், பிரபாகரன், மாரிச்செல்வம், வேல்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.