தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பாரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் அஸ்வின் குமார்(7). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். அஸ்வின் குமார் காய்ச்சல் காரணமாக கடந்த 2 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் தனது வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் இன்று வேம்பார் கடலோர காவல் நிலையத்திற்கு எதிரில் உள்ள அவரது வீட்டில் தனியாக இருந்த அஸ்வின் குமார் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் இரத்த வெள்ளத்தில் வீட்டின் வாசலில் உயிரிழந்து கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் சூரங்குடி காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். பின் உடனடியாக அங்கு விரைந்து சென்று சிறுவனின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைத்து கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டுமின்றி காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்த 7 வயது சிறுவன் மர்மமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
குற்றம்
2-ம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் குத்திக் கொலை - போலீஸ் விசாரணை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தற்காலிக ஓட்டுநர் இயக்கிய அரசு பேருந்து சாலையோரத்தில் இறங்கி விபத்து : 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு காயம்!
அடுத்த
பொங்கல் தொகுப்பு மற்றும் 1000 ரூபாய் வழங்கிய எம்எல்ஏ மார்க்கண்டேயன்!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026